www.garudavega.com
iTechUS

இந்த தேதியில்ல தளபதி 67 படத்தோட அப்டேட் வருமா?.. பிரபல கல்லூரியில் பேசிய லோகேஷ் கனகராஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தின் அப்டேட்டை லோகேஷ் கனகராஜ், பிரபல கல்லூரியில் பேசும் போது பகிர்ந்துள்ளார்.

Lokesh Kanagaraj about Thalapathy Vijay 67 Movie Update

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரீ ரிலீஸாகும் கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்'.. உலகம் முழுவதும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா! மாஸ்

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ். இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்'  படமும் ஹிட்டாகி இருந்தது.

Lokesh Kanagaraj about Thalapathy Vijay 67 Movie Update

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ்  இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்டை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Lokesh Kanagaraj about Thalapathy Vijay 67 Movie Update

Images are subject to © copyright to their respective owners.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் இணைவது உறுதியான நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் தான் இன்னும் வெளியாகவில்லை.

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌.

Lokesh Kanagaraj about Thalapathy Vijay 67 Movie Update

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள PSG கல்லூரியில் மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய லோகேஷ் கனகராஜ், "தளபதி 67 படம் குறித்து இதுவரை பேசவில்லை. என்னோட காலேஜ்க்கு வந்துட்டு அப்டேட் சொல்லாம போனா நல்லா இருக்காது. அப்டேட்க்கு சின்ன Hint தரேன். ஞாபகம் வச்சுக்கோங்க. பிப்ரவரி 1, பிப்ரவரி 2, பிப்ரவரி 3" என லோகேஷ் கனகராஜ் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

Also Read | மகள் பிறந்தாளை அரசு பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா & பிரசன்னா! நெகிழ்ச்சியான வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj about Thalapathy Vijay 67 Movie Update

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy 67 Update, Thalapathy Vijay will find this news story useful.