மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் முத்திரை பதித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இதனைத் தொடர்ந்து கார்த்தியின் கைதி திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த மாஸ்டர் திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படி பேக் டு பேக் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் லோகேஷ், தமது பிறந்த நாளை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், கௌதம் மேனன், லிங்குசாமி, சசி மற்றும் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோருடன் கொண்டாடும் புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
By far the best birthday ever!!! 😊
Thank you soo much for this Sirs! 🙏 pic.twitter.com/vvdf9MuaXe
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 16, 2021
அந்த பதிவில், “இது எப்போதும் தமது சிறந்த பிறந்த தினக் கொண்டாட்டம்” என்று குறிப்பிட்டுள்ள லோகேஷ், ‘தேங்க் யு சோ மச் சார்ஸ்’ என பன்மையில் தெரிவித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கமலை வைத்து இயக்கும் விக்ரம் திரைப்படத்துக்கான பணிகளில் மும்முரமாக உள்ளார்.