தீபாவளி நெருங்கிவிட்டது. இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாட இருக்கும் திரையுலக தம்பதியினரின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 24 ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆடைகள் வாங்குவது, பட்டாசு விற்பனை என இந்தியாவே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு திரையுலகத்தை சேர்ந்த பல புதுமண தம்பதிகள் தங்களது தலை தீபாவளியை கொண்டாட இருக்கின்றனர்.
ரன்பீர் கபூர் - ஆலியாபாட்
வெகுநாட்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த பாலிவுட் ஜோடி இந்த வருடம் தங்களது தலை தீபாவளியை கொண்டாட இருக்கின்றனர். இந்த தம்பதியின் திருமணம் எப்போது என சினியுலக வட்டாரங்களில் வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஆலியா பாட் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் பட உருவாக்கத்தின் போதே, விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு இந்த தம்பதி காதலிப்பதாகவும் அறிவித்தனர். கோலிவுட்டில் பிரபலமான இந்த காதல் ஜோடி, கடந்த ஜூன் மாதம், 9 ஆம் தேதியன்று திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரவீந்தர் சந்திரசேகரன் - மகாலக்ஷ்மி
லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். இதனிடையே அண்மையில் ரவீந்தர், மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியும் இந்த ஆண்டு தங்களது தலை தீபாவளியை கொண்டாட இருக்கின்றனர்.
புகழ் - பென்சி ரியா
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் புகழ். இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்சி ரியாவை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது திரைப்படங்களிலும் நடித்துவரும் புகழுக்கு என ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் மக்களிடையே பெரும் Famous ஆன இந்த தம்பதியினரும் இந்த ஆண்டு தங்களது தலை தீபாவளியை கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.
ஆதி - நிக்கி கல்ராணி
மிருகம், ஈரம், மரகத நாணயம் ஆகிய படங்களின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஆதி. இவர் நடிகை நிக்கி கல்ராணியை கடந்த மே மாதம் 19 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். நீண்ட ஆண்டுகளாக காதலித்து கரம் பிடித்த இந்த தம்பதிக்கும் இதுவே தலை தீபாவளியாகும்.