www.garudavega.com

ஜன.21ம் தேதி OTT-ல ரிலீஸ் ஆகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. FULL LIST ரெடி!.. WEEK END-அ ஜமாய்ங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா தொற்றுக்கு பிறகான காலகட்டத்தில், ஓடிடி மூலம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கும் வழக்கம், மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

list of indian films and web series releasing in ott on june 21

மக்களும் அதிக ஆர்வத்துடன் இருப்பதால், திரையரங்கில் வெளி வராமல், நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதே போல, தியேட்டர்களில் வரும் படங்கள், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு, ஓடிடி தளத்தில் வெளியாகும். அப்படி நேரடியாகவும், தியேயட்டர் ரிலீஸின் வெற்றிக்கு பிறகும், ஓடிடி தளங்களில், நாளை என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்று பார்ப்போம்.

ஷியாம் சிங்க ராய்

நானியின் நடிப்பில், தெலுங்கில் வெளியாகியிருந்த திரைப்படம் ஷியாம் சிங்க ராய். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இரட்டை வேடங்களில் நடித்திருந்த நானி, மிகச் சிறப்பான பெயரை வாங்கியிருந்தார். அதே போல, அவருக்கு நாயகிகளாக நடித்த சாய் பல்லவி, கிரீத்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிப்பும் அதிக அளவில் பேசப்பட்டது.

ஷியாம் சிங்க ராய் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், இன்று இரவு (ஜனவரி 21) 12 மணிக்கு வெளியாகவுள்ளது.

அகாண்டா

அதே போல, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில், 'அகாண்டா' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 2 ஆம் தேதி வெளியாகியிருந்தது. பக்கா மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருந்த அகாண்டா, ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், மிக பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

பேச்சுலர்

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த திரைப்படம் 'பேச்சுலர்'. இதில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக திவ்யா பாரதி நடித்திருந்தார். இருவரின் நடிப்பும் அதிகம் பேசப்பட்ட நிலையில், இந்த திரைப்படத்தின் பாடல்களும் பெரிய ஹிட்டடித்திருந்தது.

பேச்சுலர் திரைப்படம், சோனி லைவ் தளத்தில், இன்று இரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளது.

நேரடியா ஓடிடி தான்

இதனை தவிர்த்து, திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களிலும் சில திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இசையமைப்பாளரும், நடிகருமான தர்புகா சிவா முதல், முதலாக இயக்கியுள்ள திரைப்படம் 'முதல் நீ முடிவும் நீ'. இதன் ட்ரைலர் சமீபத்தில், வெளியாகியிருந்த நிலையில் , 90's கிட்ஸ்களின், பள்ளிக் காலங்களை நினைவு கூரும் வகையில், சிறப்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

அதிகம் புதுமுகங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றதன் காரணத்தினால், படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த  திரைப்படம், 'Zee 5' தளத்தில், இன்று இரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளது.

மற்ற படங்கள்

இதைத் தவிர, மலையாளத்தில் ரேவதி மற்றும் ஷேன் நிகாம் ஆகியோர் நடித்துள்ள 'பூதாகாலம்' என்னும் திரைப்படம், சோனி லைவ் தளத்தில் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளது. இதன் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி, அதிகம் வரவேற்பைப் பெற்றிருந்தது.

மேலும், '36 Farmhouse' என்ற ஹிந்தி திரைப்படம், Zee 5 தளத்தில், இன்று இரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளது. திரைப்படங்கள் இல்லாமல், 'Unpaused' என்ற ஹிந்தி வெப் சீரியஸின் இரண்டாம் பாகம், அமேசான் தளத்தில் இரவு 12 மணிக்கும், 'Loser' என்ற வெப் சீரியஸின் இரண்டாம் பாகம், 12 மணிக்கு, Zee 5 தளத்திலும் வெளியாகவுள்ளது.

நாளை ஒரே நாளில், நிறைய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால், நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

List of indian films and web series releasing in ott on june 21

People looking for online information on Akhanda, Bachelor, Darbuka Siva, Divya Bharathi, GV Prakash, Madonna Sebastian, Mudhal Nee Mudivum Nee, Nandamuri Balakrishna, Nani, Revathy, Sai Pallavi, Shane Nigam, Shyam Singha Roy will find this news story useful.