www.garudavega.com

THE WARRIOR: "சக்தி வாய்ந்த வில்லன்.. " - ஹிட்ச்காக்கை நினைவூட்டி ஆதியை புகழ்ந்த DSP..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர்  N.லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் “தி வாரியர்”. Srinivaasaa Silver Screen சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Lingusamy the warrior DSP praises villain aadhi

Also Read | ரத்த தானத்துக்குன்னே புது App-ஆ..? கலக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்.! குவியும் பாராட்டுகள்.

படத்தின் வெளியீட்டினை ஒட்டி தமிழ் திரைப் பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.  இந்த நிகழ்வில், நடிகர் ஆதி பேசுகையில், “இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. குரு கேரக்டரை போன்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய லிங்குசாமி சாருக்கு நன்றி.

திரைத்துறை ஆளுமைகளான மூத்த படைப்பாளிகள் இங்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இப்போது அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இப்படத்தில் சிறந்த ஆதரவாக இருந்த ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. இப்படத்தின் வெற்றி சந்திப்பின் போது நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இப்படம் ஜூலை 14, 2022 அன்று வெளியாகிறது. அனைவரும் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என பேசினார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், “இயக்குநர் லிங்குசாமி சாருக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக வேலை செய்ய பேசினோம், அது இறுதியாக இந்த படத்தில் தான் நடந்தது. அவர் சிறந்த கவிஞர். அற்புதமான மனிதர், எந்த ஒரு திரைப்பட பிரபலங்களையும், தொழில்நுட்ப வல்லுநரையும் அல்லது யாரையும் பற்றி ஒரு எதிர்மறையான வார்த்தையையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். அறிமுகப் பட இயக்குநரை  கூட மனதார பெருந்தன்மையுடன் பாராட்டுவார். அவர் மனதுக்கு எல்லாம் நன்றாக நடக்கும்.  

Lingusamy the warrior DSP praises villain aadhi

நான் ஆரம்பத்தில் ராமுடன் வேலை பார்த்தபோது, அவரை ஒரு காதல் ஹீரோவாக தான் பார்த்தேன், இப்போது, அவரை உஸ்தாத் ராமாகப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது  மாற்றம் ஆச்சரியமாக இருக்கிறது. சமீபத்தில் பிரபுதேவா சாரை சந்தித்தேன், ‘புல்லட்’ பாடல் எல்லா இடங்களிலும் ஹிட் அடித்துவிட்டது என்று சொன்னார். எல்லாவற்றுக்கும் காரணம் ராம் மற்றும் கீர்த்தியின் அற்புதமான நடனம். நாங்கள், ஒரு குழுவாக, இந்த திரைப்படத்தில் மிக மகிழ்ச்சியுடன் பணியாற்றியுள்ளோம்.

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் மேற்கோளை நான் நினைவுகூர விரும்புகிறேன் - "ஒரு வில்லன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருக்கும்போது, அந்த திரைப்படம் சக்தி வாய்ந்ததாக மாறும்". ஆம், வாரியர் மிகவும் சக்தி வாய்ந்த திரைப்படமாக மாறியுள்ளது, அதற்கு ஆதியின் சிறப்பான நடிப்பே காரணம்.” என குறிப்பிட்டார்.

Also Read | டைட்டில் கார்டுல சிகரெட் அட்வைசரியே இல்லாத ‘ஃபாரின் சரக்கு’ படம்.. இதுதான் காரணம்.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lingusamy the warrior DSP praises villain aadhi

People looking for online information on Aadhi Pinisetty, Bullet song, Devi sri prasad, DSP, Krithi Shetty, Lingusamy, Ram Pothineni, The Warrior, The warrior 2022 will find this news story useful.