தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 (தற்காலிக பெயர்) படத்தை இயக்குனர் N.லிங்குசாமி இயக்கி வருகிறார்.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிப்பில் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நதியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பிரபல நடிகர் ஆதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அத்துடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தேவி ஶ்ரீ பிரசாத் பிறந்த நாளான இன்று அவருக்கு நடிகர் ராம் பொத்தினேனி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும், “அட.. இவரு இவ்ளோ நல்லா தமிழ் பேசுறாரே?” என்று ஆச்சரியப்படுகின்றனர்.
Namma Ustaad @ramsayz shares a video where he speaks in Tamil and wishes Music Director @ThisIsDSP #RAPO19
@dirlingusamy @IamKrithiShetty @SS_Screens @sujithvasudev @srinivasaaoffl @NavinNooli @DoneChannel1 pic.twitter.com/Nv5UfdUTZn
— Behindwoods (@behindwoods) August 3, 2021
பெரும் பொருட்செலவில் உருவாகும் #RAP019 படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.