கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேவை மணக்கும் முன் ஹர்ஷிதா நடித்த கடைசி தமிழ் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பையா’, அஞ்சான், ரஜினி முருகன்,மஞ்சப்பை, வழக்கு எண் 18/9, தீபாவளி, கும்கி, உத்தமவில்லன் போன்ற பல வெற்றி படைப்புகளை தந்த என்.லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் “நான்தான் சிவா” படத்தை தயாரிக்கிறார்கள்.

Lingusamy next movie Naanthan Siva directed by R.Panneerselvam

'ரேணிகுண்டா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். இதையடுத்து '18 வயசு' மற்றும் விஜய் சேதுபதி நடித்த  'கருப்பன்' போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும்

'நான்தான் சிவா' என்ற படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தைப் பற்றி அவர் கூறியதாவது :

ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை. இதை காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் மூலம் கூறியிருக்கிறோம். இதன் படப்பிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடந்தது. படபிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இன்று இதன் பாடல் வெளியீடு சோனி ஆன்லைனில் வெளியானது.

கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக 'உதயம் NH4' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேவை மணக்கும் முன் அவர் நடித்த கடைசி தமிழ் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பிற முக்கிய டெக்னீஷியன்ஸ் - தயாரிப்பு - என்.சுபாஷ் சந்திரபோஸ், இணைத் தயாரிப்பு  - ஜி.ஆர்.வெங்கடேஷ், ஒளிப்பதிவு - பி.ராஜசேகர், சண்டைப் பயிற்சி - ராஜசேகர், நடனம் - தினேஷ் இசை - டி.இமான், கலை - சீனு, படத்தொகுப்பு - ஆண்டனி

Entertainment sub editor

Lingusamy next movie Naanthan Siva directed by R.Panneerselvam

People looking for online information on Lingusamy, Naan Thaan Shiva, R.Paneerselvam will find this news story useful.