Bigg Boss Ultimate, 11, பிப்ரவரி 2022: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இசையமைப்பாளர் பிரேம்ஜி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
24 மணி நேரமும்...
டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளும் நாளும் விறுவிறுப்பான பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுள் சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த வாரம் எலிமினேட் ஆனார்.
Also Read: "சத்தியமா செத்துருவேன் ஜூலி".. "பண்ணுங்க வனிதா அக்கா".. ஜூலியின் அசுர ஆட்டம் Started!
திருடன் போலீஸ் டாஸ்க்
இதனைதொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டில் திருடன் போலீஸ் டாஸ்க் நடந்துவந்தது. இதுவும் அப்படி ஒன்றும் சாதாரணமாக போகவில்லை, வேற லெவலில் வெறித்தனமாகவே இந்த டாஸ்க்கிலும் பல முக்கிய சம்பவங்களும் சண்டைகளும் சச்சரவுகளும் வாதங்களும் விதண்டாவாதங்களும் அரங்கேறி வருகின்றன.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து
இந்நிலையில் தான் சுப்ரமணியபுரம், பசங்க, ஈசன் ஆகிய படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தம்முடைய பதிவு ஒன்றில், “Bigg Boss வீட்டுக்குள் செல்கிற வயது முதிர்ந்த ஆனால் அறிவு முதிர்ச்சி இல்லாத ஜீவராசிகளுக்கு மட்டும்” என குறிப்பிட்டு ஒரு பரபரப்பு கருத்தை பதிவிட்டுள்ளார்.
"அழாதே.. அழாதீர்கள்" என்று சொல்லாதீர்கள்..
இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ள தம்முடைய கருத்தில், “ஒருவர் அழும்போது "அழாதே.. அழாதீர்கள்" என்று சொல்லாதீர்கள். அவர்கள் அழக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் அவர்கள் அழுகையை மாற்றக்கூடிய வகையில் பேசத்தெரிய வேண்டும், அல்லது வாயை மூடிக்கொண்டு உங்கள் வேலையைப் பார்க்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
அடிப்படை உளவியலைப் புரிந்துகொள்ளுங்கள்..
மேலும் அந்த பதிவில், “கொஞ்சமாவது அடிப்படை உளவியலைப் புரிந்துகொள்ளுங்கள்.. ஒருவர் அழும்போது அதைப்பற்றி எதுவுமே சொல்லாமல், அப்படி ஒன்று நடப்பதாகவே பதிவு செய்யாமல் அவரைத் தேற்றும் வண்ணம் தெளிவாக, எளிதாக, நிதானமாகப் பேசவேண்டும். நீங்கள் சொல்லி நிறுத்தமுடியாத அழுகை தானாக அடங்கி தெளிவுறுவார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.
அழாதே என்றால் அழுகை அதிகமாகும்..
தொடர்ந்து அந்த பதிவில் ஜேம்ஸ் வசந்தன், “ஒருவர் அழும்போது அவரை இறுகக் கட்டியணைத்து அழாதே என்றெல்லாம் சொல்லக்கூடாது. அணைத்தவுடன் அழுகை பீறிட்டு வரும், அழாதே என்று சொல்லச்சொல்ல அழுகை அதிகமாகும். விம்மத் தொடங்கிவிட்டால் அதை அடக்குவது அழுபவர்க்கே சாத்தியமில்லை. மெல்லக் கையைப்பிடித்து பக்கத்தில் எங்காவது உட்காருவதற்கு அழைத்துச் சென்று, அமர்ந்து, கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு பேசத் தொடங்குங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பிக்பாஸெல்லாம் பார்க்கிறாரா? என ஆச்சரியமாக கேட்டு வருவதுடன், அவருடைய இந்த அறிவுரைகளை பகிர்ந்தும், இதற்கு கமெண்டுகளை பதிவிட்டும் வருகின்றனர்.
Also Read: "ஆரம்பிச்சாச்சு.. ஆபரேஷன் க்ளீனிங்".. அத்தன பேரும் நாமினேட் பண்ணிய அந்த 2 பேர்!