Annaathae others us
www.garudavega.com

"யூடியூப் சேனல்ல பாத்தேன்!".. ஜெய்பீம் நிஜ செங்கேணிக்கு வீடு கட்டித்தர முன்வந்த பிரபல நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

lawrence offers home for Jai Bhim real senkeni paravathi

முன்னதாக இப்படத்தைப் பார்த்துவிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். அத்துடன் பழங்குடி இருளர் இன மக்களின் கல்வி, பொருளாதார வாழ்வு மேம்பட வேண்டி நடிகர் சூர்யா, தமிழக முதல்வரிடம் 1 கோடி ரூபாய் கொடுத்திருந்தார். 

1990களில் தமிழகத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், ராஜாக்கண்ணு உள்ளிட்ட பழங்குடி இருளர் இன மக்களின் மீது பொய் வழக்கு போட்டு காவல்துறை சித்ரவதை செய்த, லாக்கப் கஸ்டடியில் உயிரிழப்பதாக காட்டப்படும். இதனை அடுத்து, படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக சட்டப்படி வழக்காடல் செய்வார்.

இந்நிலையில், நிஜ ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் (படத்தில் வரும் செங்கேணி) பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனக்கு நடந்தவற்றை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் கூறியதுடன், படத்தில் வரும் காட்சிகள் எந்த அளவுக்கு அவருடைய நிஜவாழ்க்கையுடன் பொருந்திப் போகின்றன  என்பதை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு விவரித்திருந்தா. மேலும், தற்போது, தான் மிகவும் வறுமையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ள ராகவா லாரன்ஸ். “செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு ராசாக்கண்ணு கொல்லப்பட்டார். அவரது மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை தனியார் யூடியூப் சேனலில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது.

அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக் கேட்டறிந்ததும் கூடுதலாகத் துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன்.

ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டுவந்த யூடியூப் குழுவினருக்கு என் நன்றிகள்.

28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்குத் தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ‘ஜெய் பீம்’ படக்குழுவினருக்கும், ‘ஜெய்பீம்’ படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்!” என்று தெரிவித்துள்ளார். செங்கேணி பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த முழு பேட்டியை இணைப்பில் காணலாம். 

"யூடியூப் சேனல்ல பாத்தேன்!".. ஜெய்பீம் நிஜ செங்கேணிக்கு வீடு கட்டித்தர முன்வந்த பிரபல நடிகர்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lawrence offers home for Jai Bhim real senkeni paravathi

People looking for online information on 2D Entertainment, Jai Bhim, Jai Bhim Tamil, Lijo mol Jose, Manikandan K, Rajisha Vijaya, Suriya will find this news story useful.