பிரபல கன்னட ஹீரோவும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா நேற்று (08/06/2020) மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். மிகவும் இளம் வயதிலேயே அவர் மரணமடைந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவிற்கும் பிரபல நடிகை மேக்னா ராஜிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது மேக்னா கர்ப்பமாக இருப்பதாக கூறுப்படுகிறது. தனது குழந்தையை பார்க்கும் முன்னரே சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்தது பெரும் கவலையை அளித்துள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் மேக்னா ராஜிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. இறுதிச் சடங்கில் பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், நடிகர் அர்ஜூன், மேக்னா ராஜ், சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரர் துருவா சார்ஜா உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Paid my last respect to #ChiranjeeviSarja and condoled Arjun Sarja, Sundar Raj, wife Meghana Raj & brother Dhruva Sarja. Strength to the whole family members & film fraternity. My prayers and thoughts to his whole family members during this time of grief. pic.twitter.com/QnpkOixea8
— DK Shivakumar (@DKShivakumar) June 8, 2020