சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர். ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.
அண்ணாத்த’ படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, படத்தின் ஓட்ட நேரம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் என சென்சார் போர்டு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினியின் பெயர் கணேசன் என தகவல்கள் கிடைத்துள்ளன.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. இந்த படம் தீபாவளிக்கு நவம்பர் 4 அன்று திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த படம் திட்டமிட்ட நவம்பர் 4 ஆம் தேதிக்கும் ஒரு நாள் முன்பே. அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று வெளியாக உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Cine Lounge திரையரங்கில் இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அமெரிக்க நேரப்படி நவம்பர் 3, மாலை 4.30 மணிக்கு முதற்காட்சி துவங்குகிறது.
இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி (நவம்பர் 4) மணிக்கு அமெரிக்காவின் கலிபோர்ன்யாவில் அண்ணாத்த படம் திரையிடப்படுகிறது. ஆகையால் அமெரிக்க - இந்திய நேர வேறுபாடு காரணமாக அண்ணாத்த திரைப்படம் முன்கூட்டியே நவம்பர் 3 அன்று வெளியாவது போல தெரிகிறது.
Get Premiere Tickets now at our Superstar's Diwali Dhamaka Film #Annaatthe at Cine Lounge Fremont 7https://t.co/8jizTbWG0b @rajinikanth pic.twitter.com/dsOnN4b44N
— Ciné Lounge (@CineLoungeusa) October 19, 2021