இளையராஜாவின் பின்னணி இசை குறித்து இயக்குநர் மகேந்திரன் தெரிவித்ததை, அவரது மகன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசைஞானி என்றும் மேஸ்ட்ரோ என்றும் அழைக்கப்படுபவர் இளையராஜா. அன்னக்கிளி முதல் இப்போது வரை, இவர் இசையமைத்த பாடல்கள், தமிழர்களின் வாழ்க்கையில் கலந்த ஒன்று என்றே கூறலாம். இதனிடையே இளையராஜா இன்று தனது 77-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் மறைந்த மூத்த இயக்குநர் மகேந்திரனின் மகன், ஜான் மகேந்திரன் ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற காட்சியை பகிர்ந்துள்ள அவர், ''இளையராஜா ஒரு சிறந்த டயலாக் ரைட்டர் - என்று அப்பா சொல்வார். இந்த காட்சியில் ஷோபா ரஜினி சாரை விட்டு பிரிந்து செல்லும் போது இசைக்கப்படும் பின்னணி இசையை கேட்டால், அவர் சொன்னது உண்மை என்பது உங்களுக்கு புரியும்'' என அவர் பதிவிட்டுள்ளார்.
Ilayaraja is my best Dialogue writer - Director Mahendran. You can realize the truth in his words, when u listen to the bgm which Ilayaraja composed when Shoba walks away from Rajini sir.... pic.twitter.com/W9SmJXHf5I
— johnMahendran (@johnroshan) June 2, 2020