நடிகர் அர்ஜூனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் இளம் வயதில் மறைந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அவரது மனைவியான நடிகை மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்த நிலையில் தனது முதல் குழந்தையை கூட பார்க்காமல் இறந்தது பெரும் துயரமாக அமைந்தது.
இந்நிலையில் நடிகை மேக்னா ராஜிற்கு இரட்டை குழந்தை பிறந்ததாக செய்தி ஒன்று பரவியது. இதனையடுத்து அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் சில விஷயங்கள் குறித்து பேசி நாட்கள் ஆகிறது. விரைவிலேயே பேசுவேன்.
அதுவரை என் ரசிகர்கள் வியூஸ்காக வரும் வீடியோ மற்றும் செய்திகளை நம்பாதீர்கள். என்னை பற்றியும் என் குடும்பத்தினர் பற்றியுமான தகவல்களை நானே நேரடியாக சொல்வேன். என்று விளக்கமளித்துள்ளார்.