உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உலகிலேயே தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி தான். ஆயிரக்கணக்கான மக்கள் அந்நோயின் பிடியில் சிக்கி இருக்கின்றனர். அத்தனை ஆயிரம் பேருக்கும் சரியான மருத்துவ வசதி செய்ய முடியாமல் அந்நாடு திணறி வருகிறது. ஆரம்பத்தில் மக்கள் இம்மாதிரி ஊரடங்கு விதிகளை மீறியதால் தான் இத்தாலி தேசம் இன்று இந்த நிலைமையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் பலரும் மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனரும், நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவிட்டுருக்கிறார். அதில் சிரியா தேசத்து சிறுவன் ஒருவன் பயங்கரவாத தாக்குதலின் போது சொன்ன வார்த்தைகளை கூறியுள்ளார். அந்த 3 வயது சிறுவன் சொன்ன வார்த்தைகள் உலகத்தையே உலுக்கியது. "நான் இறைவனிடம் இது எல்லாவற்றையும் சொல்கிறேன் பாருங்கள்" என்று சொன்ன சிறுவன், உண்மையிலேயே சொல்லி விட்டான் போல என்று பதிவிட்டு அவர் 'நாம் மனிதநேயத்திற்கு திரும்ப வேண்டிய நேரம்' இது என்று கூறியுள்ளார்.
Don’t know whether the msg is true or fake , but we are definitely abusing earth and not caring enough for the children!! We have to shed all our differences & try to reverse damage & make this world a better place to live in...
Loads of love and wishes for health & happiness😍 https://t.co/FoeG20QekF
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) March 24, 2020