"எல்லாரும் சேர்ந்து இதைப் பண்ணனும்" - சமீப பிரச்சனைக்கு தைரியமாக குரல் கொடுத்த ARJUN REDDY..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஸ்டாராக உருவாகி உள்ளார் விஜய் தேவர்கொண்டா. பல இளைஞர்களின் ஸ்டைலிஷ் ரோல் மாடலாகவும் விளங்குகிறார். இவரது 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் இவர் நடித்த அந்த கதாப்பாத்திரம் இவரை தமிழ் சினிமா வரை அழைத்து வந்தது.

கொரோனா வைரஸ் அரசு பொது அறிவிப்பு படத்தில் விஜய் தேவர்கொண்டா l Vijay Devarkonda joins Government For Corona Virus PSA

சமீபத்தில் இவரது 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' வெளியானது. அதில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராசி கண்ணா நடித்திருந்தனர். அடுத்ததாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிக்கிறார்.

இப்படி இருக்க இன்றைய பெரிய பிரச்சனையே கொரோனா வைரஸ் தான். மக்கள் அனைவரும் மிகவும் பீதியில் உள்ளனர் என்றே சொல்லலாம்.  இந்நிலையில் உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பற்றி எடுக்கப்பட்ட அரசு PSA ஒன்றில் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார்.

இதில் மக்கள் எப்படி முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அவசர கால எண் போன்ற பல தகவல்களை கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தேவர்கொண்டா, அதற்கு மேல் "நாம் எல்லாரும் சேர்ந்து தான் இதை செய்ய வேண்டும். எல்லாரும் பரிபூரண உடல்நலத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா வைரஸ் அரசு பொது அறிவிப்பு படத்தில் விஜய் தேவர்கொண்டா l Vijay Devarkonda joins Government For Corona Virus PSA

People looking for online information on Corona Virus, PSA, Vijay Deverakonda will find this news story useful.