'விஜய்' பட பாணியில் செயல்படுகிறாரா ரஜினி??... குழப்பங்களுக்கு என்ன காரணம்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த் தமது அரசியல் வருகை குறித்த முக்கிய முடிவை இன்று வெளியிட்டார். லீலா பேலஸில் நடந்த கூட்டத்தில் பேசிய ரஜினி "எனது அரசியல் வருகை தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மீன் குழம்பு வெச்ச பாத்திரத்துல சக்கரை பொங்கல் சமைச்சா மாதிரி ஆகிடும். எனக்கு முதல்வர் ஆசை எப்பவும் இருந்ததில்லை. ரஜினி மக்கள் மன்றத்தில் இளைஞர்களுக்கு தான் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்." என்றும் கூறியுள்ளார்.

அரசியல் வருகை குறித்து விஜய் பட பாணியில் செயல்படுகிறாரா ரஜினி l Does Rajinikanth's Political Entry Decision Follows Thalapathy Vijay Style In

இந்த பேச்சு அவர் முதல்வராக வர வேண்டும் என்று கனவு கண்ட அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஆனாலும் அவரது இந்த தியாக முடிவிற்கு பலர் ஆதரவும் தருகின்றனர்.

ஆனாலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த வழி சில பிரபல படங்களை நினைவுப் படுத்தாமல் இல்லை. ஆம் 'சர்க்கார்' படத்தில் இதே மாதிரி ஒரு காட்சி இருக்கும். அரசியல் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார் விஜய். அவற்றை சாதித்தும் காட்டுவார்.

இறுதியில் அவரையே முதலைவராக கொண்டுவர வேண்டும் என அவரை முன்னிறுத்தும் போது, வேண்டாம் என்று மறுத்துவிடுவார். படித்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை முதல்வர் பதவிக்கு கைகாட்டி விட்டு, " நன்கு படித்தவர்கள் கையில் ஆட்சி இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று கூறுவார்.

இந்த காட்சியை நினைவு கூர்ந்த ரசிகர்கள் பலரும், ரஜினிகாந்த் தற்போது செய்திருப்பது அதே போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.

ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'பாபா' படத்திலும் இதே மாதிரி ஒரு சீன் வருமே. கிடைத்த ஏழு வரங்களில் கடைசி வரத்தை வைத்து ஒரு அறிவில் தேறிய முதியவரை முதல்வராக்குவர் ரஜினி. இப்படி அவரது படத்திலேயே ஒரு மாஸ் சம்பவம் இருக்கும். எனவே பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், தங்கள் தலைவரின் முடிவில் இருக்கும் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

அரசியல் வருகை குறித்து விஜய் பட பாணியில் செயல்படுகிறாரா ரஜினி l Does Rajinikanth's Political Entry Decision Follows Thalapathy Vijay Style In

People looking for online information on Political entry, Rajinikanth, Sarkar, Vijay will find this news story useful.