நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குவது குறித்து இளம் இயக்குனர் ஶ்ரீ கணேஷ் டிவிட்டரில் சில தகவல்களை அறிவித்துள்ளார்.
Also Read | சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் ஜோடியான அதிதி ஷங்கர்..! வெளியான சூப்பர் அறிவிப்பு
சுயாதீன திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ்.
இந்த படத்தில் கபடி வீரராகவும், நடிகர் அஜித்தின் ரசிகராகவும் அதர்வா நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் காந்திமதி எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் நாளை மறுநாள் ஆகஸ்ட் - 5 ஆம் தேதி ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு டிவிட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் இயக்குனர் ஶ்ரீ கணேஷ் கலந்து கொண்டார்.
அப்போது ரசிகர் ஒருவர் "அடுத்த படம் அஜித் கூட என்று செய்திகள் வருகிறதே? அப்படி இருந்தால் மிகவும் சந்தோஷம். அதற்கு முதலில் வாழ்த்துகள்" என அந்த ரசிகர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த இயக்குனர் ஶ்ரீ கணேஷ், "மிக்க நன்றி சகோ, அது ஒன்னுமில்லை அதைப் பற்றி இப்போது எதுவும் பேச முடியாது. கண்டிப்பாக எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படம் பற்றிய அப்டேட் சொல்றேன்" என பதில் அளித்துள்ளார்.
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் AK61 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
Also Read | கிளாசிக் லுக்கில் KGF புகழ் ஶ்ரீநிதி ஷெட்டி..பிரபல போட்டோ கிராபருடன் அடுத்த போட்டோ ஷூட்!