தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி.
Also Read | 'VTK' படம் பார்த்துட்டு பிரபல நடிகர் போட்ட சூப்பர் ட்வீட்.. நெகிழ்ந்த சிம்பு..
கீர்த்தி ஷெட்டி, துளு நாடான மங்களூருவை சேர்ந்தவர் . உப்பெனா, ஷ்யாம் சிங்க ராய், பங்கர்ராஜு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து, மக்கள் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.
சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனியுடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி நடித்த 'வாரியர்' படம் சமீபத்தில் வெளியாகிருந்தது. வாரியர் படத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில், சிம்பு பாடி இருந்த புல்லட் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கீர்த்தி ஷெட்டி பிரபலமானார். விசில் மஹாலக்ஷ்மி எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்திலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.
அப்போது ரசிகர்கள் அவரிடம் நடிகர் அஜித்குமார் & தளபதி விஜய் குறித்து கேள்வி எழுப்பினார்கள். ஒரு வார்த்தையில் இருவர் பற்றியும் குறிப்பிட கேட்டனர். இதற்கு பதில் அளித்த கீர்த்தி ஷெட்டி, "அஜித், Genuine Person என கேள்விப்பட்டுள்ளேன்" என கூறியுள்ளார். அதேபோல் நடிகர் விஜய் குறித்து, "Inspiring Superstar" என பதில் அளித்துள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு குறித்த கேள்விக்கு, "நிஜ வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார்" என பதில் அளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் குறித்த கேள்விக்கு, "Super Down to Earth" என பதில் அளித்துள்ளார்.
#AskKrithi One word about @Actorvijay pic.twitter.com/fhRMaVA14V
— × റോബിൻ ⱼD × 🕊 (@PeaceBrwVJ) September 15, 2022
Also Read | Ponniyin Selvan ரிலீஸ்க்கு முன்பே படம் பார்த்தாரா பிரபல நடிகரின் மனைவி? அவரே வெளியிட்ட Post.!