www.garudavega.com

சசிகுமார்.. ஒரு நண்பன்-னாலே உயிரை கொடுப்பாரு. 5 நண்பர்களா?.. ‘கொம்ப வெச்ச சிங்கம்டா’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் S.R.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

kombu vacha singamda running sasikumar SR Prabhakaran

இப்படத்தில் ஊர்ப் பெரியவர் தெய்வேந்திரனாக மறைந்த இயக்குநர் மகேந்திரன் நடித்திருக்கிறார். பெரியவர் மகனாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். சசிக்குமார் ஜோடியாக தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார். குறிப்பாக சசிகுமாரின் உயிர்நண்பனாக சூரி நடித்துள்ளார்.

தவிர, இப்படத்தில் ஹரீஷ் பேராடி, தயாரிப்பாளர் இந்தர்குமார், ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ‘பிச்சைக்காரன்’ தீபா ராமானுஜம், ‘மருது’லீலா பாட்டி, நண்பர்களாக ராகவ் விஜய், அபி சரவணன், சந்தோஷ் கிருஷ்ணன், லோகு, அருள்தாஸ், சங்கிலி முருகன், ஶ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

SR.பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தினை இந்தர்குமார் தயாரித்துள்ளார். NK ஏகாம்பரம் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  திபு நிணன் தாமஸ் இசையமைக்க, SR.பிரபாகரனின் ஆஸ்தான எடிட்டரான டான் போஸ்கோ இப்படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார்.

Also Read: அட.. ‘அந்த சீசன்லயே’ BiggBoss-க்குள்ள பிரியங்கா வந்துருக்காங்களா? time travel பண்ணிருப்பாங்களோ.. Viral த்ரோபேக் ப்ரோமோ!

படத்தின் கதை, மத்திய தமிழகமான கரூர் மாவட்டத்தில் நடக்கிறது. ஒரு பெரும் கிராமமான கிருஷ்ணராயபுரம் ஊரின் பெரியவர் தெய்வேந்திரன். அந்த கிராமத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பிடித்தமானவரான தெய்வேந்திரனின் சொல்லுக்கு ஊரே கட்டுப்படும்.

அப்படிப்பட்ட தெய்வேந்திரனின் ஒரே மகனுக்கு, ஐந்து நண்பர்கள். “மண்ணு தின்ற வயசுல இருந்து ஒன்னா திரிஞ்ச பயலுக” என, சாதி மத வேறுபாடின்றி பழகும் இவர்களின் நட்புக்குள், ஊரில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் ஒரு பிரிவினையை ஏற்படுத்துகிறது.

Also Read: பாவனி - நிரூப் Kiss.. அமீர் ரியாக்‌ஷன தான் கவனிச்சோம்!.. அதே Scene-ல ராஜூ என்ன பண்ணிருக்கார் பாருங்க!

அதன் பின் இரண்டு அணிகளாக பிரிந்த இவர்களது நட்புக்குள் என்ன நடந்தது.? ஒன்றாய் பிறக்கவில்லை என்றாலும் ஒன்றாய் வளர்ந்த இவர்களின் நட்பின் வாழ்வுதனை சூது கவ்வியது. ஆனால் மீண்டும் நட்பு வென்றதா? என்பதே ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் கதை.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் SR.பிரபாகரன்  “அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எனது கதை, திரைக்கதை,  இயக்கத்தில்  வெளிவந்துள்ள, எனது நான்காவது படைப்பான  “கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக  இருக்கும் என்று நம்புகிறேன்.

இது வரை சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என எனது மூன்று படைப்புகளுக்கும் நீங்கள் அளித்த ஆதரவிற்கு பெரும் நன்றிகள். அதே ஆதரவை எனது நான்காவது படைப்பிற்கும் தருவீர்கள் என நம்புகிறேன் உங்கள் அனைவரது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் பல!” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: சதீஷ், பவித்ரா-வின் ‘நாய் சேகர்’.. செம காமெடி! .. அதுலயும் மிர்ச்சி சிவாவின் வாய்ஸ் ஓவர் அல்டிமேட்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kombu vacha singamda running sasikumar SR Prabhakaran

People looking for online information on Kombu vacha singamda, Kombu Vecha Singamda, Sasikumar, SR Prabhakaran will find this news story useful.