"கொலசாமி" என்ற பாடல், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் உண்மையானத் துயரத்தை உள்வாங்கியவர்களாய், வருடம் முழுவதும் வெட்டவெளி வெயில் காட்டில் வெந்து தணியும் விவசாயிகளை மதிப்போம். விவாசிகளின் விவசாய தொழிலுக்கு முன்னுரிமை வழங்கி விவசாயத்தைக் காப்போம் என்ற உள்ளார்ந்த வேண்டுகோளை உரத்தக் குரலில் ஒலிக்கிறது இந்த "கொலசாமி" பாடல். லொயோலா இன்ஞிசினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த கொலசாமி பாடல் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பாடலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயத்தை மட்டுமே நம்பி அதையேக் கச்சையாகக் கட்டிக்கொண்டு பல எதிர்பார்ப்புகளோடு, சிறு சிறு கனவுகளை மனக்கண்கொண்டு வாழும் விவசாயிகளுக்கு, திடீர் தீடீரென உருவாகும் பருவநிலை மாற்றத்தாலும் இயற்கையின் சீற்றத்தாலும் சொல்லிமாளா கஷ்டத்தையும் நஷ்டத்தையும் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்கிறார்கள். இப்படிப்பட்ட தொடர் நிகழ்வை நம் கண் முன்னே படம்பிடித்துக் காட்டுகிறது இப்பாடல்.
தன் வாழ்க்கையின் உச்சநிலை துயரத்தை தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தனக்கு சோறுபோடும் விளைநிலத்தை தான் பெற்றெடுத்தப் பிள்ளையாகவேப் பேணிக்காக்கிறார் விவசாயி.
இதற்கு பாடல் எழுதி இயக்கிய மாணவர் எஸ்.அருள்துரை.
இசை:எம்.சுமன் மரிய அந்தோணி.
பாடகர்:யாழினி
எடிட்டிங்:B.சரவணன்
கிரியட்டிவ் சப்போர்ட்: நதியா
மீடியா சப்போர்ட்:மூவி பாண்ட் டிஜிட்டல்
Pro: ஜான்சன்
தயாரிப்பு:காஸ்மோஸ் மீடியா புரொடக்ஷன்ஸ் .
இந்த பாடலை பிரபல சினிமா இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நாளை 20.8.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அவரது டிவிட்டரில் வெளியிடுகிறார்.