www.garudavega.com

கோலங்கள் 2 வருமா?.. டைரக்டர் திருச்செல்வம் சொன்ன நச் பதில்.. கதை வேற ரெடி பண்ணிட்டாராம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியமான இடத்தை பிடித்த தொடர்களில் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடர். சுமார் 6 ஆண்டுகள் வரை ஒளிபரப்பான இந்த தொடரில், நடிகை தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Kolangal 2 Update by Devayani and director Thiruselvam exclusive

இவருடன் தீபா வெங்கட், மஞ்சரி, அஜய் கபூர், சத்யப்ரியா, அபிஷேக் சங்கர், ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலரும் கோலங்கள் தொடரில் நடித்திருந்தனர். மேலும் திருச்செல்வம் இந்த தொடரை இயக்கி இருந்தார். தமிழ் சீரியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு தொடராக கோலங்கள் பார்க்கப்படுகிறது.

கோலங்கள் தொடரை இயக்கி இருந்த திருச்செல்வம், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கி வருகிறார்.

கோலங்கள் Reunion

இந்த நிலையில், கோலங்கள் தொடரில் அம்மாவாக நடித்திருந்த சத்யபிரியா 70 ஆவது பிறந்தநாளின் போது, சினிமாவுக்குள் நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதை ஒரு நிகழ்ச்சியாக எடுத்து கொண்டாடி உள்ளார். ஏராளமான திரைப்படங்களில் நாயகியாக நடித்து பிரபலம் ஆனவர் சத்யபிரியா. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்திற்கு தாயாக நடித்திருந்தார். இதே போல, ரோஜா, ராஜாவின் பார்வையிலே, நீ வருவாய் என, படையப்பா, ப்ரண்ட்ஸ் என சுமார் 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சத்யபிரியா 70 ஆவது பிறந்தநாள் விழா

மேலும், திருச்செல்வம் இயக்கத்தில், தேவயானி நடித்திருந்த கோலங்கள் தொடரிலும் முக்கிய கதாபத்திரத்தில் சத்யபிரியா நடித்திருந்தார். தொடர்ந்து எதிர்நீச்சல் தொடரிலும் அவர் முக்கிய கதாபாரத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, சத்யபிரியா 70 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Kolangal 2 Update by Devayani and director Thiruselvam exclusive

அந்த வகையில், இயக்குனர் திருச்செல்வம், நடிகை தேவயானி, ஸ்ரீவித்யா என கோலங்கள் தொடரின் Reunion போல அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, கோலங்கள் 2  குறித்து சில தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

கோலங்கள் 2 வருமா?

இது பற்றி பேசி இருந்த திருச்செல்வம், "கோலங்கள் 2 நாங்க எதிர்பார்க்கிறோம். கண்டிப்பா வரும். ஏன்னா அது வந்து நிறைய Hope இருக்குற சீரியல். Sequel வர்றதுக்கும் ரொம்ப வாய்ப்புள்ள சீரியல் அது. அதுக்குள்ள கதைகள் எல்லாம் பண்ணி வச்சுட்டேன் நானு. ஆனா அது வேற ஒரு புரொடக்ஷன் ஹவுஸ் அப்படிங்கறதுனால, காலம் கனிந்தால் நிச்சயம்  சன் டிவியில் வரும். சன் டிவில மட்டும் தான் வரும். சன் டிவில மட்டும் தான் வரணும்" என தெரிவித்தார்.

Kolangal 2 Update by Devayani and director Thiruselvam exclusive

அதே போல கோலங்கள் 2 தொடருக்கு தன்னுடைய எதிர்பார்ப்பு குறித்து பேசிய நடிகை சத்யபிரியா, "டைரக்டர் எதிர்பார்க்கிறாரோ இல்ல நம்ம அபி (தேவயானி) எதிர்பார்க்கிறாங்களோ இல்லையோ நான் எதிர்பார்க்கிறேன். ஏன்னா நான் கொஞ்சம் நடமாடுற நிலைமையில தான் இருக்கேன். நாங்க எல்லாரும் வெயிட்டிங்ல தான் இருக்கோம்" என்றார்.

Kolangal 2 Update by Devayani and director Thiruselvam exclusive

தேவயானி சொன்ன பதில்

இது பற்றி பேசிய நடிகை தேவயானி, "நம்ம டைரக்டர் ஓகே சொல்லி இருக்காரு. கோலங்கள் பார்ட் 2 -க்கு நிறைய சான்ஸ் இருக்கு. நான் எங்க போனாலும் என்கிட்ட எல்லாரும் கேட்பாங்க. எல்லாரும் எதிர்பார்த்துட்டு தான் இருக்காங்க, எல்லாரும் மாதிரி நானும் ரொம்ப எதிர்பார்த்துட்டு தான் இருக்கேன். மறுபடியும் அம்மா, மகள் காம்பினேஷன் வந்து சூப்பர் ஹிட் ஆகும். மறுபடியும் நம்ம நடிக்க போறோம் ஹிட் பண்ண போறோம் " என தெரிவித்தார்.

கோலங்கள் 2 வருமா?.. டைரக்டர் திருச்செல்வம் சொன்ன நச் பதில்.. கதை வேற ரெடி பண்ணிட்டாராம்!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kolangal 2 Update by Devayani and director Thiruselvam exclusive

People looking for online information on Devayani, Kolangal, SathyaPriya, ThiruSelvam will find this news story useful.