இசைஞானி இளையராஜா இசையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், “யார் இந்த பேய்கள்” என்கிற பெயரில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு ஆல்பம் பாடல் உருவாகியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பிக் பாஸ் வீட்டுக்குள்ளயே அசிம்க்கு வந்த மிரட்டல் 😅.. "அட யாருப்பா அந்த ஹவுஸ்மேட்டு?"
திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பா விஜய்யின் பாடல் வரிகளில் இந்த மியூசிக் வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
“யார் இந்த பேய்கள்” பாடல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது. வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் கஷ்டங்களும் வேதனைகளும் பொழுதுபோக்குத் துறையில் உள்ள பிரபலங்களை பாதித்தன் விளைவாகவே இந்த விழிப்புணர்வு மியூசிக் வீடியோ வெளிவந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த ஆல்பம் பாடலின் நோக்கம் குறித்து படக்குழு தரப்பில் வெளியான தகவலின்படி, “சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும், ஆதரிக்கவும் தவறினால், அது தரும் மனச்சோர்வு குழந்தையை கடுமையாக துன்புறுத்தும். இங்கு பாலியல் குறித்து பேசுவது ஒரு தடைசெய்யப்பட்ட விஷயமாக இருப்பதால், குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டே இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இக்குழந்தைகளின் துயரங்கள் தீர்க்கப்படாவிட்டால், அவர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவார்கள், இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். சோனி மியூசிக் வெளியிட்ட இந்தப் பாடலின் நோக்கம் விழிப்புணர்வை மட்டும் பரப்புவது மட்டுமல்லாமல், மக்களை பயிற்றுவிப்பதும் ஆகும். ஒரு குழந்தையின் அப்பாவித்தனம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பாலியல் குற்றவாளிகள் ஒழிக்கப்பட வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொடர்பு - சதிஷ் (AIM).
A big shout out to ppl working behind @childline1098, @TulirAgainstCSA and other organisations who work relentlessly in rescuing and rehabilitating sexually abused victims.#YaarInthaPeigal https://t.co/eqjqqajzMH
— kiruthiga udhayanidh (@astrokiru) February 10, 2023
Also Read | 'துணிவு' படத்தில் பயன்படுத்தப்பட்ட டம்மி பணம்.. வைரலாகும் மேக்கிங் BTS வீடியோ!