கன்னட மொழியில் பிரபலமான நடிகர் ரவிச்சந்திரன். பருவராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பூவே உன்னை நேசித்தேன் என்று ஜூஹி சாவ்லாவுடன் அவர் பாடிய பாடலை அன்றைய ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நாட்டுக்கு ஒரு நல்லவன் என்ற படத்தை தயாரித்து அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் ரவிச்சந்திரன். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்து சாண்டல்வுட்டில் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் அவர்.
இந்நிலையில் நடிகர் ரவிச்சந்திரன் தனது 58-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரவிச்சந்திரனுடன் முதன் முதலாக எடுத்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் நடிகை குஷ்பு அவருடன் நாட்டுக்கொரு நல்லவன் படத்தில் நடித்ததை நினைவு கூர்ந்து தனது 33 வருட கால நண்பர் ரவிச்சந்திரன் அன்று முதல் இன்றுவரை அப்படியே இருக்கிறார் என்று புகழ்ந்துள்ளார்.
ரசிகர்கள் பலரும் தங்களுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்