ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் கோகுலத்தில் சீதை.
இந்த நிகழ்ச்சியில் தமிழரசன் மற்றும் ஆஷா கவுடா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்ஜூன் மற்றும் வசு எனும் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த கதையில் அர்ஜூனின் சிறு வயது ஹார்ட் ஃபிரண்ட் தான் வசு என்பது அர்ஜூனுக்கு தெரியாமல் உள்ளது.
இதை பயன்படுத்தி ஃப்ராடு பெண்ணான இனியா, அர்ஜூனிடம், தான் தான் அவரது சிறு வயது ஹார்ட் ஃப்ரண்ட் என்று சொல்லி ஏமாற்றி வருகிறார். இதனிடையே தற்போது அர்ஜூன் வசு பின்னால் சுற்றுகிறார். ஆனால் வசு தள்ளி தள்ளி போகிறாள்.

இந்நிலையில் தான் தற்போது வசுவும், அர்ஜூனும் மங்களம் மாமி என்பவரது வீட்டுக்கு விருந்தினராக போகின்றனர். அந்த வீட்டில் தான் மங்களம் மாமியாக குஷ்புவும், அவரது உதவியாளராக வையாபுரியும் நடித்து வருகின்றனர்.

குஷ்பு பாஜகவில் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் நடிகர் வையாபுரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பு, சுந்தர் C இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மணை-3 படத்தை தயாரித்துள்ளார்.
ALSO READ: விஜய் சேதுபதி .. சந்தீப் கிஷன் .. ஆதி .. சூர மாஸ் காம்போ! .. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே?