தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில், கதாநாயகியாக நடித்து , அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தவர் நடிகை குஷ்பு.
Selfie-க்கு கூட நிக்கல.. யாருப்பா இவங்க.. ஹ்ருதிக் ரோஷன் நடிப்பில் தீயாய் பரவும் விளம்பர பட வீடியோ
சின்னத்தம்பி, சிங்காரவேலன் உள்ளிட்ட இவரின் பல திரைப்படங்கள், இன்றளவிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டால், அதனை கூடியிருந்து பார்க்கும் மக்கள் ஏராளமாக உள்ளனர்.
'அண்ணாத்த' திரைப்படம்
தற்போது தனது கணவரும் இயக்குனருமான சுந்தர். சி-யுடன் இணைந்து, தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம், பல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார் குஷ்பு. இன்னொரு பக்கம், அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் பிசியாக இயங்கி வருகிறார். கடந்த ஆண்டு, தீபாவளி விருந்தாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த 'அண்ணாத்த' திரைப்படத்தில், குஷ்பு நடித்திருந்தார். அடுத்ததாக, நடிகர் மோகனுடன் ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
புதிய தொடர்
அதற்கு முன்பாக, சன் டிவியில் ஒளிபரப்பான 'லட்சுமி ஸ்டோர்ஸ்' சீரியலிலும், ஜீ தமிழில், ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' என்ற தொடரிலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், 'மீரா' என்ற புதிய சீரியல் ஒன்றிலும், நடிகை குஷ்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பூஜையுடன் இந்த சீரியல் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
புதிய ப்ரோமோ
இந்நிலையில், 'மீரா' சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றினை, கலர்ஸ் தமிழ் சேனல் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உணவருந்திக் கொண்டிருக்க, மருத்துவரான தனது கணவரிடம், "நீங்கள் எங்களுடன் நேரம் செலவிடுவதே மிக குறைவு. அதிலும் பாதி நேரம், மொபைல் போனில் தான் இருக்கிறீர்கள். ஹாஸ்பிடல்ல ஏதாவது பிரச்சனை இருந்தா, என்கிட்ட சொல்லலாம். நானும் ஒரு டாக்டர் தான்" என தெரிவிக்கிறார்.
கண்ணீருடன் குஷ்பு
இதற்கு பதிலளிக்கும் கணவர், அது பற்றி உன்னிடம் சொல்ல முடியாது என்றும், கொஞ்சம் நேரம் பேசாமல் இரு என்றும் கூறுகிறார். இருந்த போதும் மீண்டும் குஷ்பு கேட்க முற்பட, கோபத்தில் கன்னத்தில் அறைகிறார் கணவர். இதனால், கண்ணீர் வடிக்கும் குஷ்பு, இது போன்ற பல பெண்கள் தேவையே இல்லாமல் கணவர் கைகளில் இருந்து அடி வாங்குவதாகவும், குழந்தைகள் முன்பு கைநீட்டி அடிப்பது தவறு என்றும் கூறுகிறார்.
Stand With Meera
எனது கணவர் செய்தது தவறு என்றால், இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள் என குஷ்பு குறிப்பிட, #StandwithMeera என்ற ஹேஸ்டேக்குகளும் இடம்பெறுகிறது. மீரா தொடர், மனைவிக்கு எதிராக செயல்படும் கணவரை தட்டிக் கேட்கும் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்பது இந்த ப்ரோமோ மூலம் தெரிய வருகிறது.
It's time to react! Help Meera to take the right decision.
Give a Missed Call to 70955 11111 and #StandWithMeera@khushsundar | #Khusbhu | #Meera | #ColorsTamil pic.twitter.com/7QcFdqWnlN
— Colors Tamil (@ColorsTvTamil) March 4, 2022
பிரபல போட்டியாளரை திருமணம் செய்யும் நிரூப்? கொண்டாடும் ஹவுஸ்மேட்ஸ்.. என்ன நடக்குது?