RRR Others USA
www.garudavega.com

சென்சாரான KGF CHAPTER 2... ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தின் Censor Board இன்று வெளியாகி உள்ளது.

KGFChapter2 Censored U/A Runtime 2hr 48mins

விஜய்யின் பீஸ்ட்.. வெளிநாட்டில் ஒரு நாள் முன்பே ரிலீசா? உண்மை என்ன? முழு தகவல்!

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’  திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. டிரெய்லரும் சூப்பர் ஹிட் ஆகி உள்ளது.

இந்நிலையில் KGF Chapter 2 சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடிய போடுங்க.‌. பிரபல OTT-யில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்... எப்போ? எதுல?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

KGFChapter2 Censored U/A Runtime 2hr 48mins

People looking for online information on KGFChapter2, Prashanth Neel, Ravi Basrur, Srinidhi Shetty, Yash will find this news story useful.