www.garudavega.com

KGF இயக்குநருடன் பிரபாஸ் இணையும் ‘சலார்’.. முக்கிய நடிகரின் மாஸ் கேரக்டர் ரிவீல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜி.எஃப் மற்றும் கே ஜி எஃப் -2 ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'சலார்'.

KGF Prashanth Neel Prabhas Salaar Jagapati Babu character

நடிகர் பிரபாஸ், நடிகை சுருதிஹாசன் நடிப்பில் மாஸான ஆக்சன் அட்வென்ச்சர் திரைப்படமாக 'சலார்' உருவாகிறது. இன்று 'சலார்' படக்குழுவினர், புதிய அப்டேட்டை வெளியிட்டனர். இதில் தெலுங்கின் முன்னணி நடிகரான ஜெகபதிபாபு 'ராஜமன்னார்' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் மிரட்டலான லுக், போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது.

'சலார்' படத்தில் இடம்பெறும் ராஜமன்னார் கதாபாத்திரம், கதையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனை போஸ்டர் மூலம் வெளிப்படுத்துவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அத்துடன் இந்த கேரக்டர் லுக் போஸ்டர், 'சலார்' படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தும்.

'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் இரண்டு பாகங்களை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் 'கே.ஜி.எஃப்' பட நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், தயாரிக்கும் சலார் படத்தின் படப்பிடிப்பு 20 சதவீதம் நிறைவு செய்திருப்பதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்'என்றும் அறிவித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு, இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் 'சலார்' படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் மிரட்டலான போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக இயக்குனர் பிரசாந்த் நீல் பேசுகையில், சலார் படத்தில் இடம் பெற்றுள்ள மேலும் சில கதாபாத்திரங்களை பற்றிய லுக், படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் வெளியிடப்படும் என்றார்.

Also Read: "இது புரிய அவ்ளோ கஷ்டமா?"..  என்ஜாய் எஞ்சாமி பாடகர் ‘அறிவு’-க்காக கொந்தளித்து பா.ரஞ்சித் பரபரப்பு ட்வீட்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

KGF Prashanth Neel Prabhas Salaar Jagapati Babu character

People looking for online information on Jagapati Babu, KGF, Kgf 2, Prabhas, Prashanth Neel, Salar will find this news story useful.