பெங்களூருவில் புதன் கிழமை அதிகாலையில் நடிகர் பி.எஸ்.அவினாஷ் சென்ற கார் மீது கேன்டர் லாரி மோதியது.
Also Read | இந்தியாவுக்கு வெளியே 'விக்ரம்' படம் இந்த OTT -ல தான் ரிலீஸ்! முழு தகவல்
நடிகர் அவினாஷ் தனது பென்ஸ் காரில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கேஜிஎஃப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான கன்னட நடிகர் பிஎஸ் அவினாஷ் பெங்களூருவில் கார் விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார்.
இன்று வியாழன் அன்று, பிஎஸ் அவினாஷ் இந்த சம்பவம் பற்றி ஒரு அறிக்கையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில், “நேற்று காலை 6:05 மணியளவில், எனக்கு வாழ்நாள் முழுவதும் பயம் கொடுக்கும் சம்பவம் நடந்தது. மிகக் குறைந்த நேரத்திற்குள் கற்பனைக்கு எட்டாத நிகழ்வு அது.
நான் ஜிம்மை நோக்கிச் சென்றபோது, அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது, ஆனால் சிவப்பு சிக்னலைத் தாண்டி காலியான சாலையில் வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது, அதன் தாக்கம் கிட்டத்தட்ட கார் பானட் கிழியும் அளவுக்கு இருந்தது. எல்லாம் வல்ல இறைவனுக்கும், உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி, விபத்தில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது.
இந்த முழு செயல்முறையின் போதும் எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும், எங்கள் மிகவும் திறமையான காவல்துறை, ஆர்டிஓ மற்றும் சுந்தரம் மோட்டார்ஸில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு மிகவும் நன்றி. இத்தகைய அன்பின் வெளிப்பாட்டைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன் மற்றும் உண்மையிலேயே சிறப்பாக ஆசீர்வதிக்கப்பட்டதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நன்றி, எப்போதும் நன்றியுள்ள அவினாஷ்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிய இரண்டு பாகங்கள் கொண்ட KGF படத்தில் பிஎஸ் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்தார். முதல் பாகம் 2018 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் வெளியான இரண்டாம் பாகம் உலகளவில் ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து கன்னட சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
Also Read | லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் "தி வாரியர்".. பட டிரெய்லர் ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்