கேஜிஎஃப் படத்தின் இசையமப்பாளர் ரவி பஸ்ரூர் தனது மிரட்டலான இசையால் திரையரங்குகளில் ரசிகர்களைப் புல்லரிக்க செய்துள்ளார்.
Also Read | “கல்யாணத்துக்கு பிறகு கஷ்டப்பட்டு வாங்குனது..”… அச்சோ என்ன ஆச்சு? - CWC மணிமேகலை பதிவு!
2 நாளில் 240 கோடி ரூபாய்….
ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், நேற்று ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக 10000 திரைகளில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. கேஜிஎப் கன்னடத்தில் உருவான படமாக இருந்தாலும் ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்கள் அதை தங்கள் மொழிப் படமாகவே பார்க்கிறார்கள். முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை செதுக்கிய கலைஞர்கள்….
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியுள்ள 'கே ஜி எஃப் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடித்திருக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார். உஜ்வல் குல்கர்னி இந்த படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
வியக்க வைக்கும் கேஜிஎஃப் 2 கலைஞர்கள்…
இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பெரும்பாலானவர்கள் மிகவும் வித்தியாசமான பின்னணியில் இருந்து வந்துள்ளனர். படத்தின் எடிட்டராக பணியாற்றியது 19 வயது உஜ்வல் குல்கர்னி என்ற இளைஞராம். யுடியூபில் fan made வீடியோக்களை உருவாக்கி வந்த இவர் கேஜிஎப் முதல் பாகத்தின் வீடியோக்களை எடிட் செய்துள்ளார். அதைப் பார்த்து கவர்ந்த கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் அவரையே இரண்டாம் பாகத்தை எடிட் செய்ய நியமித்துள்ளாராம்.
பட்டறையில் தந்தைக்கு உதவிய ரவி பஸ்ரூர்…
அதே போல படத்தின் இசையமைப்பாளாரான ரவி பஸ்ரூர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனது தந்தைக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யும் விதமாக அவரின் பட்டறையில் வேலை செய்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடுப்பி மாவட்டம், குந்தபுரா தாலுகாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில், தனது தந்தைக்கு ஆயுதங்கள் செய்யும் வேலையில் உதவி செய்துள்ளார்.. கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது அவரது தந்தை கூடுதலாக ரூ 35 வருவாய் ஈட்ட இது உதவியதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். தற்போது கேஜிஎஃப் 2 ரிலீஸ் ஆகி அவரை இந்திய சினிமாவைவே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
Also Read | ”வடிவேல் சாருக்கு நன்றியும் முத்தமும்”…. மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி... viral pics