www.garudavega.com

'1978-81 ராக்கி பாய் எங்கே?'.. KGF - 3 க்கு ஹின்ட் கொடுத்த வீடியோ.. போன வருஷம் பண்ண சம்பவம் அப்படி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப்  2 ஆகிய இரண்டு படங்களின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை  அடுத்து இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக யஷ் மாறியுள்ளார்.

KGF Chapter 3 Hint on KGF Chapter 2 Movie Anniversary

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படம் கடந்தாண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூலை குவித்தது.

KGF படங்களுக்கு பின்னர் நடிகர் யஷ், தனது அடுத்த படம் குறித்து எந்த தகவலும் வெளியிடாமல் இருந்தார். அவருடைய அடுத்த பட அறிவிப்பை சினிமா ரசிகர்கள் பலர் எதிர் நோக்கி இருந்தனர்.

KGF Chapter 3 Hint on KGF Chapter 2 Movie Anniversary

இந்நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆவதையொட்டி படக்குழு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கே ஜி எப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவலையும் படக்குழு சேர்த்துள்ளனர். 1978 முதல் 1981 வரை இடைப்பட்ட காலத்தில் ராக்கி பாய் எங்கே சென்றார்? என்ன ஆனார்? குறித்த தகவல்கள் அதில் இடம் பெறும் என தெரிகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

KGF Chapter 3 Hint on KGF Chapter 2 Movie Anniversary

People looking for online information on KGF Chapter 2, Yash will find this news story useful.