www.garudavega.com

பிரபல போட்டோகிராபருடன் போட்டோ ஷூட்.. அசத்திய KGF புகழ் ஶ்ரீநிதி ஷெட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஶ்ரீ நிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

KGF Chapter 2 Actress Srinidhi Shetty Latest Photoshoot Photos

Also Read | அஜித் நடிக்கும் AK 61.. பட ஷூட்டிங் சென்னைல இந்த ஏரியால தான் நடக்குதாம்! வேறமாரி அப்டேட்

துளு நாட்டை சேர்ந்த நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி தற்போது விக்ரம் உடன் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற இவர் யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இந்த ஆண்டு வெளிவந்த  KGF Chapter 2 படத்தின் மூலம் இந்திய அளவில் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார்.

KGF Chapter 2 Actress Srinidhi Shetty Latest Photoshoot Photos

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

KGF Chapter 2 Actress Srinidhi Shetty Latest Photoshoot Photos

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். கருப்பு நிற  சேலையில் இந்த போட்டோ ஷூட்டில் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.

KGF Chapter 2 Actress Srinidhi Shetty Latest Photoshoot Photos

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது கோப்ரா படத்தில் பாவனா மேனன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

KGF Chapter 2 Actress Srinidhi Shetty Latest Photoshoot Photos

Also Read | போட்டோஷூட்டில் டான்ஸ் ஆடிய ராஷ்மிகா மந்தனா.. 2 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட வைரல் வீடியோ!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

KGF Chapter 2 Actress Srinidhi Shetty Latest Photoshoot Photos

People looking for online information on KGF Chapter 2, Srinidhi Shetty, Srinidhi Shetty Latest Photoshoot will find this news story useful.