பிரபல கன்னட நடிகர் மோகன் ஜூனேஜா திடீர் மரணம் அடைந்துள்ளார்.
பிரபல கன்னட நகைச்சுவை நடிகரான மோகன் ஜுனேஜா தனது 54வது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். நீண்ட நாட்களாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த இவர். சிகிச்சை பலனின்றி பெங்களூரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த நடிகர், ஷங்கர் நாக்கின் வால் போஸ்டர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார், பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இவர் வில்லன் மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்ததற்காக ரசிகர்களால் அறியப்படுகிறார்,
கர்நாடகத்தின் முன்னணி நடிகர்களான தர்ஷன், உபேந்திரா, புனித் ராஜ்குமார், அம்பரீஷ், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் பிளாக்பஸ்டர் படமான கேஜிஎஃப்: 2 இல் காணப்பட்டார், மேலும் கேஜிஎஃப் முதல் பாகத்திலும் நடித்தார்.
கேஜிஎஃப் படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம், இவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தது. அதில், “நடிகர் மோகன் ஜுனேஜாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். கன்னடத் திரையுலகம் மற்றும் எங்கள் KGF குடும்பத்தில் அவர் மிகவும் பிரபலமான முகங்களில் ஒருவர்". என தெரிவித்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/