KGF 2 படத்தில் இடம்பெற்ற சுல்தானா சுல்தானா பாடல் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
KGF சூறாவளி…
ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியானது. இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசானது. ரிலீஸானது முதல் இப்போது வரை வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.

1000 கோடி வசூல்…
கேஜிஎப் 2 திரைப்படம் பாகுபலி 2 மற்றும் RRR படங்களைப் போலவே வசூலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. வெளியானது முதலே அங்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்து படத்தைப் பார்த்து வருகின்றன. ரிலீஸாகி இன்று நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையிலிம் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதன் மூலம் ‘all time blockbuster’ படங்களில் ஒன்றாக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சுல்தானா பாடல்…
KGF 2 வெளியாகி ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் இப்போதும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. மேலும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் Rental வசதியோடும் கிடைக்கிறது. ஒரு மாதம் ஆகியும் இன்னும் KGF vibe குறையாத நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்ற ‘சுல்தானா’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. பில்டப் பாடலான இந்த பாடல் திரையரங்கில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்த பாடலாக அமைந்தது. அந்த அளவுக்கு பாடலின் மேக்கிங்கும், வரிகளும் அமைந்திருக்கும். இப்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் வைரலாக பரவி வருகிறது.
