2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்று பெருவாரியான சாதனைகளை முறியடித்தது.
இதனை அடுத்து கேஜிஎஃப் 2-ஆம் பாகத்தினை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். நடிகர் யஷ் , ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேஜிஎஃப் 2-ஆம் பாகத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தான், வருகிற ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகும் என்று சமீபத்தில் ஒரு அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதனால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
எனினும் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் தீவிரமானதை அடுத்து தியேட்டர்கள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது என்பதால் திரையரங்குகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் திறக்கப்படுவதாக பேசப்பட்டுள்ளது. எனினும் கர்நாடகாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அதிக மக்கள் கூடும் என்கிற அபாயம் உள்ளது.
எனவே ‘கேஜிஎஃப் 2’ செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் புதிய போஸ்டருடன் ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
Witness the MAGNUM OPUS come to life soon.#KGFChapter2 @hombalefilms @TheNameIsYash @prashanth_neel @VKiragandur @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @Karthik1423 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @PrithvirajProd @DreamWarriorpic @LahariMusic pic.twitter.com/yBjhXy1WPh
— Prashanth Neel (@prashanth_neel) July 6, 2021
அதில், இயக்குநர் பிரஷாந்த் நீல், “கேங்ஸ்டர்கள் திரை அரங்கம் முழுவதும் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார். அவர் எப்போது வருவார் என்கிற வரும் புதிய தேதியை விரைவில் தெரிவிப்போம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
The Monster arrival date will be announced soon#KGFChapter2@hombalefilms @TheNameIsYash @prashanth_neel @VKiragandur @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @Karthik1423 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @PrithvirajProd @LahariMusic pic.twitter.com/xRfRRe74bI
— DreamWarriorPictures (@DreamWarriorpic) July 6, 2021
இதேபோல் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளது.