பிரபல மீடியா ஒன்றில் வீடியோ ஜாக்கியாக இருப்பவர்தான் பென் ரெமோ.
அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த இவருக்கு ஒரு பெரும் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இதை ஒட்டி அவர் நலமாக மீண்டு வர வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் பலரும் #PrayForBenRemo என்கிற ஹேஷ் டேகில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிரபல புகைப்படக் கலைஞராக அறியப்படும் இவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் ஓய்வு எடுக்க கூடிய இந்த நேரத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டு விட்டது. இதனால் அவருடைய உடல்நிலை சூழல் என்பது மிகவும் மோசமான கட்டத்தை தொட்டது. எனினும் அவர் நலமாகவே இருந்து வருகிறார்.
ஆனால் அவருக்கு மனதளவில் ஒரு உற்சாகம் தேவைப்படுகிறது. எனவே இந்த மனநிலையில் இருந்து மீளும் வகையில் தமிழில் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து உற்சாகமாக அவர் பாட்டு பாடும் வீடியோ மருத்துவமனையிலிருந்து வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பலரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளதுடன் சிலரை கண் கலங்க வைத்திருக்கிறது.
குறிப்பாக தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், கௌதம் மேனம் இயக்கத்தில் உருவான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் வரும் முன்தினம் பார்த்தேனே என்கிற நினைவுகளை வருடும் மெல்லிய பாடலை தான் பாடுகின்றனர்.
இப்படியான இக்கட்டான சூழல்களில் இது போன்ற மென்மையான தருணங்கள் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கடந்து போவதற்கு கற்றுக் கொடுப்பதாகவும் பலர் இந்த வீடியோ பற்றி நெகிழ்ந்து போய் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.