கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ், தான் எப்படி பருமனான உடலிலிருந்து, ஆரோக்கியமான பிட்டான உடலை அடைந்தார் என்றும் அதற்காக தான் மேற்கொண்ட கடினமான பயணம் பற்றியும் நீண்ட பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் "என் வாழ்க்கை முதுவதும் நான் எடை பிரச்சனையுடன் போராடி வருகிறேன். என் அம்மா மற்றும் தங்கையுடன் ஒப்பிட்டு என்னை விமர்சித்திருக்கிறார்கள். அதனால் நான் டீனேஜராக இருந்தபோது நான் என் அம்மா, தங்கை போன்று அழகில்லை என்று நினைத்தேன். நான் நார்மல் இல்லை, ஏதோ சரியில்லை என்று நினைத்தேன். மக்களின் பேச்சால் அதை நம்பினேன். என் கணவர் ப்ரொபோஸ் செய்தபோது என்னிடம் எதை கண்டார் என வியந்தேன். கமெண்ட் அடிக்க, அறிவுரை வழங்க, டயட் திட்டத்தை கூற மக்கள் தயங்கியதே இல்லை. பழக்கம் இல்லாதவர்கள் கூட எடை குறைப்பு பற்றி பேசினார்கள்.
என் அம்மாவும், தங்கையும் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று ஒரு பெண் புகழ்ந்தார். அதை கேட்டு நான் நன்றி சொன்னபோது, உனக்கு என்ன ஆனது என கேட்டார். மணிக்கணக்கில் கண்ணாடி முன்பு நின்று எனக்கு என்ன பிரச்சனை என வியந்தது உண்டு. ஒரு கட்டத்தில் என்னை நானே வெறுத்தேன். சந்தோஷமாக இருக்க தகுதியில்லாதவள் என நினைத்தேன். என் தங்கை எப்பொழுதும் என் பக்கம் தான். என்னை மோசமாக பேசுபவர்களிடம் இருந்து காப்பாற்றினார். நீ தான் என்னை விட அழகு என என் தோழிகள் கூறுகிறார்கள் அக்கா என்று என் தங்கை ஒரு முறை கூறினார். அதை கேட்டு நான் சிரித்தேன். ஆனால் இன்று யோகாவின் மூலம் 20 கிலோவுக்கும் மேல் எடையை குறைத்தது தான் என் முதல் சாதனை. இந்த சாதனையை என் குரு தாரா சுதர்ஷனுக்கு டெடிகேட் செய்கிறேன்" என தெரிவித்துள்ளார்.