www.garudavega.com

மேக்கப் இல்லாத கீர்த்தி சுரேஷ்.. பார்த்து இருக்கீங்களா.. புகைப்படம் உள்ளே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

keerthy suresh shared a viral photo of her after covid recovery

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த படங்களில் நடித்து இருந்தார்.  நடிகை கீர்த்தி சுரேஷ் சில தினங்களுக்கு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தார்.

அதில் "தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டாலும், லேசான கொரோனா அறிகுறிகளை அனுபவித்து வருவதால், கோவிட்-19க்கு  சோதனை செய்து கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இது வைரஸ் பரவும் வேகத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அனைத்து கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பான கண்காணிப்பில் உள்ளேன்.

keerthy suresh shared a viral photo of her after covid recovery

என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தயவுசெய்து பரிசோதித்து கொள்ளவும்.நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால், கடுமையான அறிகுறிகளைத் தவிர்க்கவும், உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும், தயவுசெய்து உங்கள் தடுப்பூசிகளை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன், விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்குவேன்"! என அறிக்கையில் கூறி இருந்தார்.

நள்ளிரவில் திடீரென மாறிய சௌந்தர்யா ரஜினிகாந்த் DP.. நெகிழும் ரஜினி ரசிகர்கள்

 

keerthy suresh shared a viral photo of her after covid recovery

இந்நிலையில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை பகிர்ந்து கொரோணாவில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும், தற்போது நெகட்டிவ் என்ற வார்த்தை சொல்லே பாஸிட்டிவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு பொங்கல், மஹா சங்காராந்தி வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தான் மீண்டு வர வேண்டிய ரசிகர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து - டிவிட்டரில் ரஜினி - தனுஷ் ரசிகர்களின் கருத்துக்கள்.. ஒரு பார்வை

 

keerthy suresh shared a viral photo of her after covid recovery

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy suresh shared a viral photo of her after covid recovery

People looking for online information on கீர்த்தி சுரேஷ், Covid, Covid recovery, Keerthy Suresh will find this news story useful.