விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பும் கவினுக்கு கிடைத்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக ஆடி கவனம் பெற்ற கவின், நட்புன்னா என்னனு தெரியுமா, லிஃப்ட் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.
இதற்கடுத்து, அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி உள்ள 'டாடா' என்னும் திரைப்படத்தில் நாயகனாக கவின் நடித்திருந்தார். கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் உள்ளிட்ட பலரும் டாடா திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கவினின் நடிப்பும் அதிகம் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில், Behindwoods நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கவின் கலந்து கொண்டார்.
இதில் தனது திரைப்பயணம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் பல தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது இயக்குனர் நெல்சன் குறித்தும் நிறைய சுவாரஸ்யமான கருத்துக்களையும் கவின் பகிர்ந்து கொண்டார். நெல்சனின் டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களில் பணிபுரிந்திருந்த கவின், பல ஆண்டுகளாக நெல்சனுடன் பழக்கத்தில் இருப்பவர் ஆவார்.
Images are subject to © copyright to their respective owners
அப்போது அவரிடம், பீஸ்ட் படத்தின் விமர்சனத்தை நெல்சன் எதிர்கொண்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கவின், "நெல்சன் அண்ணாவோட ஃபர்ஸ்ட் படம் 'வேட்டை மன்னன்' அது கொஞ்சம் வருஷமா நடக்கல, வரல. எனக்கு நெல்சன் அண்ணாவ தெரிஞ்ச கொஞ்ச காலத்துக்கு அப்புறம் தான் தெரியும், அவர் வேட்டை மன்னன் படத்தோட டைரக்டர் அப்படின்னு. அதே நேரம் இப்படி ஒரு படம் நடக்கல அப்படிங்குற மாதிரியான ஒரு கஷ்டத்தை எங்ககிட்ட காமிச்சதே இல்ல. ஆனா உள்ள இருக்கும். கண்டிப்பா யாரா இருந்தாலும் இருக்கும்.
ஆனா அதை தாண்டி ரெண்டு Moment ஆ நான் பார்த்தது வந்து, விஜய் Tele அவார்ட்ஸ்ல நான் விருது வாங்கிட்டு ஸ்டேஜ்ல இருந்து வரும் போது, நெல்சன் அண்ணா கிட்ட சொன்னேன் ஃபர்ஸ்ட் Awardன்னு. சரி, ஓகே வாடா அடுத்த வேலையை பார்ப்போம்ன்னு சொன்னாரு. இதே மாதிரி என்னோட ஃபர்ஸ்ட் படம் கொஞ்சம் Delay ஆகி, அது ஒரு Bad Phase-ல போய் நிக்கும் போது அன்னைக்கும் நெல்சன் அண்ணா சொன்னது, சரி ஓகேடா வா அடுத்த வேலையை பார்ப்போம்ன்னு.
நான் அவருகிட்ட பார்த்த ஒரு விஷயம், எப்படிப்பட்ட வெற்றி, எப்படிப்பட்ட தோல்வியா இருந்தாலும் ரெண்டையும் நம்ம ஒரே மாதிரியா அணுக கத்துக்கிட்டோம் அப்படின்னா, நம்மளோட மனநிலை என்னைக்குமே குலைக்காமல் நம்மள Peace ஃபுல்லா பாத்துக்கும்ன்னு. அதே நேரத்துல நம்ம எல்லாத்தையுமே எடுத்துக்கணும், ஆனா அதை எடுத்துக்கிட்டு அடுத்த வேலையில பொறுப்பா பார்த்துக்கணும். அந்த மாதிரியான ஒரு வேலை தான் இப்ப போயிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்" என கவின் தெரிவித்தார்.