விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்து கமலுடன் மேடையேறிய அவர், '90 நாட்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றதே வெற்றி' என்றார்.
மேலும், கவின் பற்றி கூறிய அவர், 'நாங்க ரெண்டு பேரும் தான் இந்த பிக்பாஸ் வீட்டில் அதிகம் நாமினேட் செய்யப்பட்டோம். ஆனாலும் மக்கள் கவினை காப்பாற்றியுள்ளார்கள். என்கிட்ட இல்லாத ஒன்று கவினிடம் இருக்கிறது' என்று கூறிய சேரன், இன்னும் 10 நாட்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமாறு அறிவுரை கூறினார்.
இந்நிலையில் பிக்பாஸின் இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோவை (செப்டம்பர் 23) விஜய் டிவி ஒளிபரப்பியது. அதில், ''தர்ஷனை Confession ரூமிற்கு அழைக்கும் பிக்பாஸ் இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்? என பிக்பாஸ் கேட்கிறார். அதற்கு அவர், ஷெரினையும், சாண்டியையும் காப்பாற்ற விரும்புகிறேன் என தர்ஷன் சொல்ல, அதற்கு நீங்கள் மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் நிபந்தணை விதிக்கிறார். பின்னர் கண்கள் கலங்க அடுத்தடுத்து இரண்டு பச்சை மிளகாய்களை உண்கிறார்.