Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

பிக்பாஸ் கவினின் வேற லெவல் வாத்தி கம்மிங்... மரண மாஸ் டான்ஸ் வீடியோ... செம வைரல் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அதே போல் மிகவும் நலிவுற்றிருந்த திரையரங்குகள் மற்றும் அதன் சார்ந்த தொழில்களை மாஸ்டர் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

kavin dance for vaathi coming கவினின் வேற லெவல் வாத்தி கம்மிங்

அதிலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' பாடல் மிகவும் பிரபலம். அனிருத் இசையமைத்த இப்பாடல் ரிலீஸூக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாஸ்டரின்  வாத்தி கம்மிங் பாடலுக்கு அந்த பிரத்தியேக ஸ்டெப் போட்டு வெளியிட்ட வீடியோக்கள் பலவும் வைரலானது. விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர் கவின். இதையடுத்து சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் நடித்து இவர் பிரபலமானார். சில படங்களில் சிறிய வேடத்தில் தோன்றிய இவர், நட்புனா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவானார். மேலும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று இவர் தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில்  நடிகர் கவின் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் பாடலுக்கு வேற லெவல் நடனமாடியுள்ளார்.

பிக்பாஸ் கவினின் வேற லெவல் வாத்தி கம்மிங்... மரண மாஸ் டான்ஸ் வீடியோ... செம வைரல் வீடியோ..! வீடியோ

Tags : Kavin

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kavin dance for vaathi coming கவினின் வேற லெவல் வாத்தி கம்மிங்

People looking for online information on Kavin will find this news story useful.