‘டைட்டானிக்’ படம் மூலம் உலக ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர் பிரபல ஹாலிவுட் நடிகை கேத் வின்ஸ்லெட்.
Also Read | Raju Srivastava : சோகத்தில் ஆழ்த்திய பாலிவுட் நகைச்சுவை நடிகரின் மரணம்..! இதுதான் காரணமா..?
டைட்டானிக் திரைப்படத்தில் ரோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்திய ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்ட இவர், இதனை தொடர்ந்து ‘எனிக்மா’, ‘வார் கேம்’, ‘தி ஹாலிடே’, ‘லேபர் டே’, ‘பிளாக் பியூட்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமது பிரபல டைட்டானிக் பட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்திலான ‘அவதார்’ படத்தின் 2-ஆம் பாகமான அவதார் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வரும் 2022 டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகவிருக்கிறது.
இப்போது ‘லீ’ என்ற படத்தில் நடித்து வரும், கேத் வின்ஸ்லெட் படுபிஸியாக ஷூட்டிங் சென்றுவந்துகொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது பணியாற்றிய ‘லீ மில்லர்’ என்கிற புகைப்படப் பத்திரிகையாளரின் வாழ்க்கைக் கதையை கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டில் நடந்து வருகிறது.
ஆனால் இந்த படப்பிடிப்புக்கு இடையே, நடிகை கேத் வின்ஸ்லெட் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டுவிட்டதாகவும், புதிய திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளதாகவும் தற்போது புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
Also Read | Bonda Mani : "உதவி செய்யுங்க..!..".. ICU-வில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி - கதறி அழுத சக நடிகர்.!