ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 19) நடைபெற்றது
இந்த நிலையில் இந்த விழாவில் விஜய் பேசும் பொழுது "லைஃப் கூட ஃபுட்பால் மாதிரி தாங்க.. நாம ஒரு கோல் போட ட்ரை பண்ணுவோம் அதை தடுக்க நிறைய பேர் வருவாங்க.. இதுல சேம் சைட்லயே ஒருத்தன் எதிர் டீமுக்கு கோல் அடிப்பான். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தீர்கள் என்றால் எல்லாம் சரியாக இருக்கும் என குட்டிக் கதையை சொன்ன விஜய், வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க என்றார். மேலும், நெகட்டிவிட்டி மற்றும் ட்ரோல்ஸ் குறித்து பேசிய விஜய், ஃபன் வரைக்கும் ஓகே அதை தாண்டுறப்போ தான் பிரச்சனை” என கூறினார்.
இந்த நிலையில் விஜய் பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் நல்ல நேர்மறையாக பேசி இருக்கிறார்.. அரசியலை தொட்டுள்ளார், பேனர் மூலம் நடக்கும் மரணங்களை சீண்டி உள்ளார். சுபஸ்ரீ குறித்து மிகவும் நேர்மையாக பேசி உள்ளார். என்று பதிவிட்டுள்ளார்.
Positive speech... Touched politics
Criticised #BannerKillings
Responsible speech #subasree
Stood up for fans
Shut down twitter trolls#ThalapathyVijay uses the audio launch mic best.#BigilAudioLaunch
— Kasturi Shankar (@KasthuriShankar) September 19, 2019