ASURAN USA OTHERS
KAAPAN USA OTHERS

''என்னது டிராமாவா ?'' - இரண்டு பிக்பாஸ் பிரபலங்கள் கடும் வாக்குவாதம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார். அவரது முடிவை சற்றும் எதிர்பாராத சாண்டியும், லாஸ்லியாவும் மிகுந்த வருத்தத்துக்குள்ளாகினர்.

Kasthuri and Vanitha are discuss about Kamal Haasan's Bigg Boss 3

பின்னர் ஒருவாறு மீண்டு வந்த இருவரும் டாஸ்க்குகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இந்நிலையில் நேற்றைய தினம் (செப்டம்பர் 29) கமல்ஹாசனுடன் மேடையேறிய கவின், லாஸ்லியாவிற்காக வெளியேறும் முடிவை எடுத்ததாக கூறினார்.

இந்நிலையில் பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ''பிக்பாஸ் குறித்து பதிலளிப்பதற்கு இனி விருப்பம் இல்லை. இந்த பொய்யான நாடகத்தை பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. இது வெறும் விளையாட்டு நிகழ்ச்சி. மக்களாகிய நீங்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறீர்கள். இருவர் பிரியலாம் அல்லது இணையலாம். எனக்கு உண்மையான வாழ்க்கை இருக்கிறது. பிக்பாஸ் ஃபைனலுக்கு வருவேனானு தெரியல. என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நடிகை கஸ்தூரி, ''எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது.  நான் அவரிடம் ஏன் சண்டையிடுகிறீர்கள், இது வெறும் கேம் ஷோ என்றேன். அதற்கு அவர் இது ரியாலிட்டி ஷோ என்றார். ஆனால் அவரே தற்போது இது ஃபேக் டிராமாவா ? என்று கேட்டுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு வனிதா, ''நீங்கள் இன்னும் நிறுத்தவில்லையா கஸ்தூரி ?. நீங்கள் உங்களின் பொழுதுபோக்கிற்காக வந்தீர்கள். நான் பார்வையாளர்களின் பொழுது போக்கிறார்காக வந்தேன். இந்த நிகழ்ச்சியின் பெரிய வெற்றி பெற்றதன் காரணம் இதில் எல்லா விஷயங்களும் இருந்தது. பிக்பாஸ் டிராமா வகையைச் சேர்ந்த நிகழ்ச்சி. அதனை அனைவரும் பொழுதுபோக்கிற்காக பார்க்கின்றனர். என்றார்.

பின்னர் இதுகுறித்து பதிவிட்ட கஸ்தூரி, வனிதா மன்னிக்கவும். இதே முடிவோடு நீங்கள உருவாக்கும் படங்களை அனுகமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் என் பொழுது போக்கிற்காக வரவில்லை. நான் மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடவில்லை''என்பது போன்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kasthuri and Vanitha are discuss about Kamal Haasan's Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Kasthuri, Vanitha will find this news story useful.