சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல பாரட்டைப்பெற்ற "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து இயக்கி முடித்து உள்ளார், இயக்குனர் ஆர். கண்ணன்.
அதனைத் தொடர்ந்து 1972ம் ஆண்டு ஏ வி எம் தயாரிப்பில் தமிழின் தலைச்சிறந்த நகைச்சுவை திரைக்கதை ஆசிரியர் சித்ராலயா கோபு எழுத்தில், தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற காசே தான் கடவுளடா படத்தை ரீமேக் செய்து தயாரித்து இயக்குகிறார் ஆர். கண்ணன். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இவர் ஏற்கனவே இயக்கிய கண்டேன் காதலை, சேட்டை, தள்ளிப்போகாதே, எரியும் கண்ணாடி போன்ற படங்களும் ரீமேக் படங்கள் தான். இந்த புது படத்திற்கும் ’காசே தான் கடவுளடா’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. நகைச்சுவைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளவர் மிர்சி சிவா. முன்னனி நடிகர்களான ரஜினி,அஜித், விஜய் போன்றோர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நல்ல வரவேற்பை பெற்று வலம் வருபவர் யோகி பாபு. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், கருணாகரன், ஊர்வசி,ஷிவாங்கி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
டாக்டர் படத்தின் மூலம் புகழ் பெற்ற காமெடியன் ரெட்டிங் கிங்க்ஸ்லி இந்த காசேதான் கடவுளடா படத்தில் நடித்துள்ளார். இந்த காசேதான் கடவுளடா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பேட்ச் ஒர்க் மூலம் சிலகாட்சிகள் மேம்படுத்தப்பட்டும், புதிதாக எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் ரெட்டிங் கிங்க்ஸ்லி நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 1972ம் ஆண்டு ஏ வி எம் தயாரிப்பில் வந்த காசே தான் கடவுளடா படத்தின் சேட்டிலைட் உரிமையும் சன் டிவியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.