தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படுபவர் கார்த்திக் சுப்புராஜ்.
Also Read | விஷால் நடிக்கும் "லத்தி'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்.. ரிலீஸ் எப்போ?
குறும்பட இயக்குனராக 'ராவணம்', 'துரு', 'நீர்' போன்ற குறும்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், 2012-ம் ஆண்டு 'பீட்சா' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனரானார்.
தொடர்ந்து 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'மெர்க்குரி', பேட்ட, ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
அடுத்ததாக ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவது குறிப்பிடத்தக்கது. 'ஜிகர்தண்டா' மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், அம்பிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா இந்த படத்திற்காக 2015 ஆம் ஆண்டு பெற்றார்.
இந்தப் படம் வெளியாகி 8வது ஆண்டு விழாவை முன்னிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜிகர்தண்டா - 2 படத்தின் பூஜை மதுரையில் வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read | PS1 படத்தில் இடம்பெறாத "சொல்" Song.. வெளியானது முழு Official வீடியோ!