7-ம் நூற்றாண்டில் தெற்கு திசையில் வாழ்ந்த பாண்டிய இளவரசர் ரணதீரன், எயினர் என்ற மறைக்கப்பட்ட பழங்குடி மக்கள், என பல விதமான கதைக்களங்களை கொண்ட ஒரே படமாக யாத்திசை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் தரணி ராசேந்திரன்.
சரித்திரப் படமாக உருவாகியுள்ள ‘யாத்திசை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம், ‘விசாரணை’ மு.சந்திரகுமார், ‘பொன்மகள் வந்தாள்’ செம்மலர் அண்ணம் நடித்துள்ளார். அரசர் காலத்துப் பின்னணியில் குறைந்த பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படத்தில் சக்தி, சேயோன், ராஜலட்சுமி, வைதேகி உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே.ஜெ.கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். சக்தி ஃபிலிம் பேக்டரி இப்படத்தை ஏப்ரல் 21-ம் தேதி வெளியிடுகிறது.
Stunning trailer.... Amazing work by director @dhararasendran & team..... Looking forward for the film #Yaathisai 👏👏👍https://t.co/EXX5H8SqSu
— karthik subbaraj (@karthiksubbaraj) April 16, 2023
இந்நிலையில், 1300 வருடங்களுக்கு முன்பு, பாண்டிய மன்னனுக்கு எதிராகப் போராடிய சிறு தொல்குடியை பற்றிய கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் மன்னராட்சியிலும், தற்கால ஆட்சியிலும், ஒடுக்கப்படுகிறவர்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பின், சமத்துவத்தை நோக்கி செல்ல மறந்து, மீண்டும் அந்த அதிகாரத்தை தக்கவைக்க வேறு யார் மீதாவது ஒடுக்கம் செலுத்துகிறார்கள் என்கிற அரசியல் பேசப்படுவதாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்து, பாராட்டியுள்ளார். இதுகுறித்த அவரது ட்வீட்டில், “Stunning-ஆன trailer.. இயக்குநர் தரணி ராசேந்திரன் & குழு Amazing பணியை செய்திருக்கிறார்கள். யாத்திசை திரைப்படத்தை திர்பார்க்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.