பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் நிறுவனம் சுயாதீன திரைப்படங்களுக்காக பிரத்யேகமாக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளது.
தற்போது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 3 திரைப்படங்கள் மற்றும் 2 வெப் சீரிஸ்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் மற்றுமொரு புதிய முயற்சியாக சுயாதீன திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
இதற்கு ஸ்டோன் பென்ச் இண்டி என்று பெயரிடுள்ள நிலையில், இந்த தயாரிப்பின் கீழ் உருவாகியுள்ள முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘அல்லி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை சனல் குமார் சசிதரன் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், நிமிஷா ஷஜயான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் வெளியிட்டு ‘ஸ்டோன் பென்ச் இண்டி’ படங்களுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
#StonebenchIndie 1st film is #Alli #அல்லி
It's beautifully made heartwrenching thriller reflecting our society made by prolific filmmaker @sanalsasidharan starring National award winning @jojubestactor & @NimishaSajayan @StonebenchFilms @kaarthekeyens @kalyanshankar @onlynikil pic.twitter.com/G3s0VGPyFJ
— karthik subbaraj (@karthiksubbaraj) December 7, 2019