சொகுசு காருக்கான வரிவிலக்கினை கோரிய நடிகர் விஜய்க்கு ஆதரவாக பிரபல அரசியல் பிரமுகர் கார்த்திக் சிதம்பரம் குரல் கொடுத்துள்ளார்.
முன்னதாக சொகுசு கார் விவகாரத்தில் நடிகர் விஜய் வரி விலக்குக் கோரியிருந்த நிலையில், அதற்காக அபராதம் விதித்த நீதிமன்றம், வரி என்பது நன்கொடை அல்ல; கட்டாயம் செய்ய வேண்டிய கடமை என்று குறிப்பிட்டது.
மேலும், வரி ஏய்ப்பு ஏற்கப்படாதது என்று குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், உச்ச நட்சத்திரங்கள் ரீல் வாழ்க்கையில் மட்டும் ஹீரோக்களாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் தான் இது தொடர்பாக பேசியுள்ள கார்த்திக் சிதம்பரம், “இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை, அவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு” என தெரிவித்துள்ளார்.