www.garudavega.com

"அண்ணணா பொறந்துட்டு படுற பாடு இருக்கே".. கார்த்தியின் ட்வீட்டுக்கு சூர்யா சொன்ன ஜாலி பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா.

Karthi Suriya Tweet about 25 Years Of Suriya

Also Read | விக்ரம் நடிப்பில் 'கோப்ரா-2' வருமா? பதில் அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து!

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன்  திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த  'விக்ரம்' திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் சிறப்பு கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இதற்காக சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக கமல்ஹாசன் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சூர்யா, பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் துவங்க உள்ளது.

இந்நிலையில் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "அவர் (சூர்யா) தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப்பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார். அவர் தனது சொந்த சாதனைகளை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு நபராக, அவர் ஏற்கனவே தாராளமான ரசிகர்களின் இதயத்தை இன்னும் பெரிதாக்கினார் மற்றும் ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார். அது தான் என் சகோதரன்!" என  கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு சூர்யா பதிலாக "வந்தியத்தேவா! ❤️

அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!! 😄" என ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

 

Also Read | ஏ‌.ஆர். ரஹ்மான் இசையில் ரிலீசான 'பொன்னியின் செல்வன்' படத்தின் 6 பாடல்கள்.. முழு தகவல்

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Suriya Tweet about 25 Years Of Suriya

People looking for online information on 25 years of Suriya, Karthi, Karthi tweet about Suriya, Suriya will find this news story useful.