Naane Varuven M Logo Top
www.garudavega.com

‘PS1’-ஐ தொடர்ந்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் கார்த்தியின் அடுத்த படம் ? - செம்ம அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் 'விருமன்' மற்றும் பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கத்திலான விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Karthi starring Sardar official release date announcement

இந்த படத்துக்குப் பிறகு இப்போது, மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்கிற சரித்திர புனைவு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், நடிகர் கார்த்தி சோழ சாம்ராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

Karthi starring Sardar official release date announcement

இப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் சர்தார் திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Karthi starring Sardar official release date announcement

இந்த 'சர்தார்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். சர்தார் படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனலான கலைஞர் டிவி கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும், அக்டோபர் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : Karthi, Sardar

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Karthi starring Sardar official release date announcement

People looking for online information on Karthi, Sardar will find this news story useful.